\
எனக்கும் நயன்தாராவுக்கும் மன வருத்தம்: மோகன் ராஜா ஓபன் டாக்!

எனக்கும் நயன்தாராவுக்கும் மன வருத்தம்: மோகன் ராஜா ஓபன் டாக்!

எனக்கும் நயன்தாராவுக்கும் மன வருத்தம்: மோகன் ராஜா ஓபன் டாக்!
Published on

’தனி ஒருவன்’ படத்தின் போது எனக்கும் நயன்தாராவுக்கும் மனவருத்தம் இருந்தது என்று இயக்குனர் மோகன் ராஜா
கூறினார். 


தனி ஒருவன் படத்துக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கும் படம், ’வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் உட்பட பலர் நடிக்கின்றனர். 
படம் பற்றி மோகன் ராஜா கூறும்போது, ‘ சுழ்நிலைக்கேற்ற மாதிரி நீ மாறாதே, உனக்கேற்ற மாதிரி சூழ்நிலையை மாற்று’ என்பதுதான் படத்தின் ஒன் லைன். அறிவு, ஆதி என்ற இரண்டு இளைஞர்களைப் பற்றிய கதைதான் படம். இந்தப் படத்திலும் நயன்தாரா ஹீரோயினாக நடிப்பது பற்றி கேட்கிறாங்க. ’தனி ஒருவன்’ பண்ணும்போது எனக்கும் நயன்தாராவுக்கும் கொஞ்சம் மனவருத்தம். அப்போ ஓர் இயக்குனரா எனக்குள்ளே மித்ரனும் சித்தார்த் அபிமன்யூவும் மட்டும்தான் இருந்தாங்க. அப்படியிருக்கும்போது ஒரு பெரிய ஹீரோயினுக்கு, ‘இதுல நாம யாரு’ன்னுதானே தோணும், அது என் தவறுதான். அந்தப் படத்தைப் பார்த்துட்டு ‘நான் உங்களுக்கு இன்னும் கோ-ஆபரேட் பண்ணியிருக்கலாம்’ன்னு
நயன்தாரா சொன்னாங்க. அதுதான் அவங்க பெருந்தன்மை. இதுல அவருக்கு மிருணாளினிங்கற கேரக்டர். சிறப்பா நடிச்சிருக்காங்க’ என்றார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com