‘பொன்னியின் செல்வன்’ மிரட்டலான போஸ்டர்களுடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘பொன்னியின் செல்வன்’ மிரட்டலான போஸ்டர்களுடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘பொன்னியின் செல்வன்’ மிரட்டலான போஸ்டர்களுடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளது படக்குழு.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

இதற்கான, படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி, மத்திய பிரதேசம், ஊட்டி என பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு. படத்தின் முதல் பாகத்தை வரும் கோடையில் வெளியிடவுள்ளதாக புதிய போஸ்டருடன் தெரிவித்திருந்தது படக்குழு.

ஆனால், தற்போது ‘பொன்னியின் செல்வன்’ வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைகா புரொடொக்‌ஷன் நிறுவனர் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் பிறந்தநாளையொட்டி இன்று வெளியீட்டுத் தேதியையும் படத்தில் நடிக்கும் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டோரின் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார்கள்.

அனைவரின் போஸ்டர்களும் மிரட்டலாய் ரசிக்க வைத்தாலும் த்ரிஷா பேரழகியாக காட்சியளித்து மொத்தக் கவனத்தையும் குவிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com