இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி
இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் மணிரத்னம். ‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ உள்பட பல வெற்றி படங்களுக்கு சொந்தக்காரர். ஏராளமான படங்களையும் தயாரித்துள்ளளார். இவர் கடைசியாக கார்த்தி நடித்த "காற்று வெளியிடை" திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ரோஜா படம் மூலம் இந்திய திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம். மணிரத்னத்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். திரைக்கதையை மக்களின் மனங்களுக்கு ஏற்ற வகையில் கொண்டு செல்வதில் வல்லவர். இப்போது 62 வயதாகும் மணிரத்னம் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com