மாரி செல்வராஜ் - உதயநிதியின் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு துவக்கம்

மாரி செல்வராஜ் - உதயநிதியின் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு துவக்கம்

மாரி செல்வராஜ் - உதயநிதியின் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு துவக்கம்
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல்  தொடங்கியது.

மு.மாறனின் ‘கண்ணை நம்பாதே’, அருண்ராஜா காமராஜின் ‘நெஞ்சுக்கு நீதி’ படங்களில் நடித்துவரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடிக்கிறார். ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ‘கர்ணன்’ வெற்றிக்குப்பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படம் என்பதால் ‘மாமன்னன்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிரிகத்துள்ளன.

இன்று காலை இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை செண்பக மூரித்தி, அர்ஜுன் துரை மேற்கொள்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுத சாண்டி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com