படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார் மகேந்திரன்

படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார் மகேந்திரன்

படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார் மகேந்திரன்
Published on

இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ரஜினிகாந்த் நடித்த ஜானி, முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் முக்கியமானவராக கருதப்படும் மகேந்திரன் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் உடன் இணைந்து தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் நடந்த "புகழேந்தி என்னும் நான்" படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்தார். இதனையடுத்து, புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகேந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மகேந்திரன் மகன் ஜான் கூறுகையில், “மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எந்த பிரச்னையும் இல்லையென்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். கரு.பழனியப்பன், அருள்நிதி மருத்துவமனையில் உடன் இருக்கிறார்கள்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com