இயக்குனர் மகேந்திரன், விஜய்யின் ’தெறி’ படத்தில் வில்லனாக நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு பாராட்டுக் கிடைத்தது. இதையடுத்து அவர் நடிப்பில், மீண்டும் கவனம் செலுத்திவருகிறார். இப்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவர் அப்பாவாக, நடிக்கிறார்.
மலையாளத்தில் பகத் பாசில் நடித்து ஹிட்டான, ’மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதை பிரியதர்ஷன் இயக்குகிறார். எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தென்காசி அருகே நடந்துவருகிறது. இந்த ஷெட்யூல் ஆகஸ்ட் மாதம் முடிவடைகிறது. இன்னும் பெயரிடப்படாத இதில், உதயநிதி அப்பாவாக மகேந்திரன் நடித்துவருகிறார்.