இயக்குநர் மகேந்திரன் நலம்: மருத்துவமனை தகவல்

இயக்குநர் மகேந்திரன் நலம்: மருத்துவமனை தகவல்
இயக்குநர் மகேந்திரன் நலம்: மருத்துவமனை தகவல்

இயக்குநர் மகேந்திரன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ஜானி, முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் முக்கியமானவராக கருதப்படும் மகேந்திரன் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் உடன் இணைந்து தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.இந்நிலையில், புதுக்கோட்டையில் நடந்த "புகழேந்தி என்னும் நான்" படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்தார். இதனையடுத்து, புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகேந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் மகேந்திரன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் ஓரிரு நாளில் மகேந்திரன் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com