\
கொரோனாவிலிருந்து மீண்டு வாக்களித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

கொரோனாவிலிருந்து மீண்டு வாக்களித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

கொரோனாவிலிருந்து மீண்டு வாக்களித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
Published on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது முற்றிலும் குணமாகி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடந்த மார்ச் 29 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர், மீண்டும் நல்ல உடல்நலத்தோடு வரவேண்டும் என்று அவரது ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “ கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டேன். தற்போது கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. அனைவரும் வாக்களியுங்கள்” என்று கூறியுள்ளதோடு இன்று வாக்களித்த புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com