செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை!

செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை!
செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை!

செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

“எண்ணி ஏழு நாள்" என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என்று பி.வி.பி கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

பி.வி.பி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து இயக்குநர் லிங்குசாமி ரூ.1.03 கோடி கடன் பெற்றிருக்கிறார். இந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக அவர் வழங்கிய காசோலையும் வழங்கியிருக்கிறார். ஆனால் லிங்குசாமி கொடுத்த வங்கிக் கணக்கில் பணமில்லாததால் அந்த செக் பவுன்ஸ் ஆகியிருக்கிறது.

ALSO READ: 

இதனையடுத்து, பி.வி.பி கேப்பிட்டல் நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணையின் முடிவில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2014ம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பில் உருவாக இருந்த எண்ணி ஏழு நாள் என்ற படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com