\
லிங்குசாமி - ராம் பொத்தினேனியின் ‘தி வாரியர்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

லிங்குசாமி - ராம் பொத்தினேனியின் ‘தி வாரியர்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

லிங்குசாமி - ராம் பொத்தினேனியின் ‘தி வாரியர்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

லிங்குசாமி - ராம் பொத்தினேனி இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி வருகிறார் லிங்குசாமி. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கிய இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தலைப்பையும் வெளியிட்டுள்ளது படக்குழு. ‘தி வாரியர்’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனி முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. ஏற்கெனவே, லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படமும் காவல்துறை கதைக்களத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com