கரு பழனியப்பன் இயக்கும் ‘ஆண்டவர்’: முதன்முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி

கரு பழனியப்பன் இயக்கும் ‘ஆண்டவர்’: முதன்முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி
கரு பழனியப்பன் இயக்கும் ‘ஆண்டவர்’: முதன்முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி

கரு பழனியப்பன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

‘ஜன்னல் ஓரம்’ படத்திற்குப்பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து இயக்குநர் கரு பழனியப்பன் மீண்டும் படம் இயக்குகிறார். ’ஜன்னல் ஓரம்’ படமே மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆர்டினரி’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேரடியாக தமிழ் படத்தினை இயக்குகிறார் கரு பழனியப்பன். சமீபத்தில் வெற்றி பெற்ற ‘லிஃப்ட்’ பத்தினை தயாரித்த லிப்ரா புரொடொக்‌ஷன் தயாரிக்கிறது.

‘ஆண்டவர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதுவரை கரு பழனியப்பன் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் வித்யாசாகர் தான் இசையமைத்துள்ளார். ’பார்த்திபன் கனவு’ படத்தின் ‘கனா கண்டேனடி’, ’சதுரங்கம்’ படத்தின் ’விழியும் விழியும்’ பாடல்கள் இப்போதும் பலரின் ஃபேவரிட்டாக உள்ளன. ஆனால், இந்தமுறை முதன்முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் கரு பழனியப்பன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com