ஜகம் சுகம் அடைந்ததும் வெள்ளித்திரையில் ‘ஜகமே தந்திரம்’ - கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்
ஜகம் சுகம் அடைந்ததும் வெள்ளித்திரையில் ஜகமே தந்திரம் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் ‘சூரரை போற்று’ திரைப்படம் கொரோனா நெருக்கடியால் திரையரங்கில் அல்லாமல், ஆன்லைன் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் அக்டோபர் 30ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழ் சினிமாவில் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. திரையரங்க உரிமையாளர்கள் சூர்யாவின் முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் இயக்குநர் பாராதிராஜா உள்ளிட்ட சிலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் கூட ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுதொடர்பாக படக்குழு முறையான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ஜகம் சுகம் அடைந்ததும்.... வெள்ளித்திரையில் ஜகமே தந்திரம்” என தெரிவித்துள்ளார்.

