\
ஷங்கர் - ராம் சரண் படத்திற்கு கதை எழுதியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்?

ஷங்கர் - ராம் சரண் படத்திற்கு கதை எழுதியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்?

ஷங்கர் - ராம் சரண் படத்திற்கு கதை எழுதியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்?
Published on

ஷங்கர் இயக்கும் ’ராம் சரண் 15’ படத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

’இந்தியன் 2’படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். கடந்த வாரம் சென்னை வந்திருந்த ராம் சரண், தில் ராஜு ஆகியோர் ஷங்கரை சந்தித்து புகைப்படமும் வெளியிட்டனர்.

இந்த நிலையில், இந்தப் படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் ‘ஜகமே தந்திரம்’ வெளியானது. அடுத்ததாக, விக்ரம்- அவரது மகன் துருவ் விக்ரமை வைத்து ‘விக்ரம் 60’ படத்தை இயக்கி வருகிறார்.

சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாளுக்கு இயக்குநர் ஷங்கர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் புகைப்படங்களையும் உற்சாகமுடன் பகிர்ந்துகொண்டார் கார்த்திக் சுப்பராஜ். அரசியல் பின்னணி கொண்ட ‘ராம் சரண் 15’ படத்தில் கார்த்திக் சுப்பராஜ் இணைத்திருப்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com