ராம் சரண் படத்தில் இயக்குநர் ஷங்கருடன் கைகோத்த இன்னொரு இயக்குநர்!
ஷங்கர் இயக்கும் ’ராம் சரண் 15’ படத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தினை இயக்கி வருகிறார். நாயகியாக கியாரா அத்வானி நடிக்க தமன் இசையமைக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்தின் கதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதியது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், நாளை ‘மகான்’ வெளியாவதையொட்டி ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ளப் பேட்டியில், ”‘ராம் சரண் 15’ படத்திற்கு கதை எழுதியுள்ளதை உறுதி செய்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். அந்தப் பேட்டியில், “ ’ராம் சரண்15’கதை என்னுடையதுதான். கதையை வாங்கி ஷங்கர் சார் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.