\
இயக்குநர் கே.பாலசந்தர் மனைவி காலமானார்

இயக்குநர் கே.பாலசந்தர் மனைவி காலமானார்

இயக்குநர் கே.பாலசந்தர் மனைவி காலமானார்
Published on: 

இயக்குநர் கே. பாலசந்தரின் மனைவி உடல் நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 82.

பிரபல திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். இவர் மனைவி ராஜம். இவர் கடந்த சில நாட்களாக, உடல் நலக் குறைவுடன் இருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில், மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் அதிகாலை 4.30 மணியளவில் அவர் காலமானார்.

இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 3 மணிக்கு மேல் நடக்கிறது. இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com