ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பிறந்த நாள் இன்று

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பிறந்த நாள் இன்று
ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பிறந்த நாள் இன்று

உலக சினிமாவின் பிரபல இயக்குனரான ஜேம்ஸ் கேமரூனுக்கு இன்று பிறந்த நாள். டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் மாதிரியான திரைப்படங்களை இயக்கியதற்காக உலக சினிமா ரசிகர்களால் பரவலாக அறியப்படுபவர் அவர். 

கனடாவில் கடந்த 1954இல் இதே நாளில் பிறந்தவர் கேமரூன். அவரது பள்ளி படிப்பை நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்த பள்ளிக்கூடத்தில் பயின்றுள்ளார். பட்டப்படிப்பிற்காக 1973இல் கல்லூரியில் சேர்ந்த அவர் அதற்கடுத்த ஆண்டே அதற்கு விடை கொடுத்துள்ளார். 

பின்னர் கிடைக்கின்ற வேலைகளை செய்து வந்த கேமரூன் ஒரு கட்டத்தில் முழு நேர டிரக் டிரைவராக வேலை செய்ய ஆரம்பித்துள்ளார். அப்படியே சினிமா தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களையும் நூலங்களில் தேடிப்பிடித்து பயின்றுள்ளார். 

டிரக் டிரைவர் டூ சினிமா இயக்குனர்

1977இல் வெளியான ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படத்தை பார்த்த பிறகு சினிமா துறையில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்ற ஆர்வத்தால் தான் செய்து வந்த டிரக் டிரைவர் பணியை விட்டுள்ளார். தீவிர முயற்சிக்கு பின்னர் அதற்கடுத்த ஆண்டே குறும்படம் ஒன்றை இயக்கி இயக்குனராக அவதரித்தார் கேமரூன். பிறகு ஹாலிவுட் சினிமாவின் புரொடக்ஷன் பணிகளில் மும்முரமாக இயங்கியுள்ளார். 

1982இல் வெளியான ‘Piranha II: The Spawning’ தான் கேமரூன் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம். பின்னர் சைன்ஸ் பிக்ஷன் ஜானரில் அவர் இயக்கிய ‘டெர்மினேட்டர்’ தாறுமாறு ஹிட். ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்களில் உருவான டெர்மினேட்டர் 78.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்திருந்தது. 

பின்னர் ஏலியன்ஸ், தி அபைஸ், டெர்மினேட்டர் 2, ட்ரு லைஸ் மாதிரியான படங்களை எடுத்தவர் ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவானார். 

சமயங்களில் திரைக்கதை எழுதியும் சக இயக்குனர்களுக்கு கைக்கொடுப்பார். ‘ராம்போ : பர்ஸ்ட் பிளட் பார்ட் 2’ படத்திற்கு சில்வெஸ்டர் ஸ்டாலோன் உடன் இணைந்து திரைக்கதை எழுதியிருந்தார் கேமரூன்.

பின்னர் டைட்டானிக் மூலம் உலகளவில் சினிமா ரசிகர்களின் மனதை வென்றார். டைட்டானிக் படத்திற்காக பல இரவுகள் தூங்காத விழிகளோடு பொழுதை கழித்துள்ளார்.

1985க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தை 3டி தொழில்நுட்பத்தில் படங்கள் வெளியாகி பரபரப்பு கொடுத்தன. 2003 இல் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த ‘கோஸ்ட் ஆப் தி அபைஸ்’ ரியாலிட்டி கேமிரா மூலம் எடுக்கப்பட்ட படங்களின் வரிசையில் 3டி தொழில்நுட்பத்தில் மிரட்டியது. அதற்கடுத்து ‘ஏலியன்ஸ் ஆப் தி டீப்’ படத்தை அவர் இயக்கியிருந்தார்.

பின்னர் 2009 இல் வெளிவந்த ‘அவதார்’ மூலம் பட்டையை கிளப்பியிருந்தார் கேமரூன். தற்போது அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கம் பணிகளை செய்து வருகிறார். 2023, 2025 மற்றும் 2027 இல் அவதார் படத்தின் பாகங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை மீது தீரா காதல் கொண்டுள்ள கேமரூன் நிஜ வாழ்க்கையில் சுற்றுப்புற ஆர்வலராகவும் இயங்கி வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com