சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்தப்படம் ‘ஏலே’!

சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்தப்படம் ‘ஏலே’!
சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்தப்படம் ‘ஏலே’!

சில்லுக்கருப்பட்டி இயக்குநரான ஹலிதா ஷமீம், தன்னுடைய அடுத்த திரைப்படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்

2019-ம் ஆண்டின் கடைசியில் வெளியாகி ரசிகர்களின் கைத்தட்டலை பெற்ற திரைப்படம் ‘சில்லுக்கருப்பட்டி’. 4 வெவ்வேறான கதைகளை உள்ளடக்கிய சில்லுக்கருப்பட்டியை ஹலிதா ஷமீம் இயக்கி இருந்தார். மனிதர்களையும், அன்பையும், காதலையும் பேசிய சில்லுக்கருப்பட்டி ரசிகர்களின் மனதில் பதிந்தது. ஏற்கெனவே ஹலிதாவின் முதல் திரைப்படமான பூவரசம் பீப்பி நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில். சில்லுக்கருப்பட்டி மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநரானார் ஹலிதா ஷமீம்.

யதார்த்தமான படைப்புகளை கொடுத்து வரும் ஹலிதாவின் அடுத்தப்படம் என்னவென்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து தன் ட்விட்டரில் போஸ்டர் வெளியிட்டுள்ள ஹலிதா, “ பலரும் என் அடுத்தப்படம் என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தனர். ‘ஏலே’ திரைப்படம்தான் என் அடுத்தப்படம். விரைவில் தயாராகவுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஓட்டு வீடு, ஐஸ் சைக்கிள், பம்பரம் என கிராமத்தை நினைவுப்படுத்தும் ‘ஏலே’ போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் அழகான யதார்த்த சினிமாவை ஹலிதா கொடுப்பார் என ரசிகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com