\
”யுவன் ஒரு ஜீனியஸ்: பயங்கர கம்ஃபர்டபிளானவர்” - ஹெச்.வினோத்

”யுவன் ஒரு ஜீனியஸ்: பயங்கர கம்ஃபர்டபிளானவர்” - ஹெச்.வினோத்

”யுவன் ஒரு ஜீனியஸ்: பயங்கர கம்ஃபர்டபிளானவர்” - ஹெச்.வினோத்
Published on

”யுவன் ஒரு ஜீனியஸ்; கம்ஃபர்டபிளானவர்” என்று இயக்குநர் ஹெச்.வினோத் பாராட்டியுள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இரண்டு பாடல்களும் விசில் தீமும் கவனம் ஈர்த்துள்ளது.வரும் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது. இந்த நிலையில், புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு இயக்குநர் ஹெச்.வினோத் அளித்துள்ளப் சிறப்புப் பேட்டியில் ”யுவன் பயங்கர கம்ஃபர்டபிளானவர். ஈகோவே இல்லாத ஒரு மனிதர். ஜாலியாக பேசமுடியும். இந்தப் பாட்டு மாதிரி வேணும்னு ரெஃபரன்ஸ் வைத்துகூட சொல்லலாம். கோச்சிக்க மாட்டார். எல்லாத்துக்கும் ஒரேமாதிரிதான் ரியாக்ட் பண்ணுவார். பாராட்டினால்கூட லைட்டாதான் ரியாக்ட் வரும். யுவன் ஒரு ஜீனியஸ்” என்று யுவன் ஷங்கர் ராஜாவை பாராட்டியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com