சென்னையில் டிப்பர் லாரியில் மோதி இயக்குநர் கவுதம் மேனனின் கார் விபத்துக்குள்ளானது.
மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கவுதம் மேனன். அஜித், மாதவன், சூர்யா, சிம்பு என பல முன்னணி கதாநாயகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர். தற்போது அவர், விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்தபோது கவுதம் மேனனின் சொகுசு கார் விபத்தில் சிக்கியது. செம்மஞ்சேரி அருகே டிப்பர் லாரியில் மோதி கவுதம் மேனனின் கார் விபத்தில் சிக்கியது. இதில் கார் சேதமடைந்தது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் கவுதம் மேனன் உயிர் தப்பினார். விபத்து குறித்து கிண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.