\
விஜய் சேதுபதியின் ‘மைக்கேல்’: வில்லனாக நடிக்கும் கெளதம் மேனன்

விஜய் சேதுபதியின் ‘மைக்கேல்’: வில்லனாக நடிக்கும் கெளதம் மேனன்

விஜய் சேதுபதியின் ‘மைக்கேல்’: வில்லனாக நடிக்கும் கெளதம் மேனன்
Published on

விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் இணையும் ‘மைக்கேல்’ படத்தில் இணைந்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக ‘அனபெல் சேதுபதி’ படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து ‘கடைசில பிரியாணி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ’விடுதலை, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘கடைசி விவசாயி’, ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ‘விக்ரம்’, ‘மைக்கேல்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘மைக்கேல்’ படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இந்த நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் இப்படத்தின் வில்லனாக நடிக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. கெளதம் மேனன் ஏற்கெனவே, ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தையும் இயக்கி வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com