’அகண்டா’ இயக்குநருடன் இணையும் ராம் பொத்தினேனி

’அகண்டா’ இயக்குநருடன் இணையும் ராம் பொத்தினேனி

’அகண்டா’ இயக்குநருடன் இணையும் ராம் பொத்தினேனி
Published on

நடிகர் ராம் பொத்தினேனியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி ‘தி வாரியர்’ படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். ஆதி வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், ராம் பொத்தினேனியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தை, சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா’ படத்தின் இயக்குநர் போயபதி சீனு இப்படத்தினை இயக்குகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தினை ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். லிங்குசாமி இயக்கும் ‘தி வாரியர்’ படத்தின் தயாரிப்பாளர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. போயபதி சீனுவுடன் ராம் பொத்தினேனி இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com