\
பிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்ற சீமான், பாரதிராஜா தடுத்து நிறுத்தம்

பிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்ற சீமான், பாரதிராஜா தடுத்து நிறுத்தம்

பிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்ற சீமான், பாரதிராஜா தடுத்து நிறுத்தம்
Published on

பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா பயன்படுத்திய இடத்தை, ஸ்டூடியோ நிர்வாகம் தரமறுப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இளையராஜா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் ஸ்டூடியோ நிர்வாகம் இடத்தை தரமறுப்பதாக கூறப்படுகிறது. இடத்திற்கு ஏற்ற வாடகை தொகையை தருவதாக இளையராஜா தெரிவித்த போதும், பிரசாத் ஸ்டூடியோ சம்மதிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இளையராஜாவை அவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் புகார் எழுந்திருக்கிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இயக்குநர் பாரதிராஜா மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பிரசாத் ஸ்டூடியோவிற்கு வருகை தந்தனர். ஆனால் அவர்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் அனுமதிக்கமால் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளானது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com