இளையராஜா ஐயர் போல மாற நினைக்கிறார்: பாரதிராஜா விமர்சனம்

இளையராஜா ஐயர் போல மாற நினைக்கிறார்: பாரதிராஜா விமர்சனம்

இளையராஜா ஐயர் போல மாற நினைக்கிறார்: பாரதிராஜா விமர்சனம்
Published on

இளையராஜா ஐயராக மாற நினைப்பதால்தான், ஆங்கில நாளிதழ் அவருடைய சாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக இயக்குநர் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் சமீபத்தில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அதுகுறித்த செய்தி வெளியிட்ட ஆங்கில நாளிதழ் ஒன்று, இளையராஜாவை தலித் என்றும், அவர் தலித் என்பதற்காகவே பத்ம விபூஷண் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டதுபோலவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆங்கில நாளிதழின் அந்த செய்திக்குபல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதனையடுத்து, சாதி ரீதியாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டும் வருத்தம் தெரிவித்தும் அந்த ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் இன்று தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இளையராஜாவை விமர்சித்து பேசினார். இளையராஜா ஐயராக மாற நினைப்பதால்தான், ஆங்கில நாளிதழ் அவருடைய சாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக இயக்குநர் பாரதிராஜா குற்றஞ்சாட்டினார். மேலும் பேசிய அவர், மூலத்தை மறந்துவிட்டு புதிதாக வேடமிடுவது தவறு என்றும் விமர்சனம் செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com