”தர்காவிலிருந்து வந்த ஒரு மெழுகுவர்த்தி..” வந்தே மாதரம் பாடல் உருவானது குறித்து வெளியான சுவாரசியம்!
'தாய் மண்ணே வணக்கம்’ - ’மா துஜே சலாம்' என்ற முழக்கம் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருக்கும் ’வந்தே மாதரம்’ பாடல், வெறும் பாடல் என்பதை தாண்டி அது வரலாற்றில் ஒரு தருணமாகவே மாறிவிட்டது என்றால் பொய்யாகாது.
1997-ம் ஆண்டு ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும், வந்தே மாதரம் பாடல் இன்னும் தலைமுறைகள் கடந்தும் எதிரொலிக்கிறது.
அப்படியான தேச பக்தி நிறைந்த பாடல் என்பது பலபேருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் வந்தே மாதரம் பாடல் தேச பக்திக்கானது மட்டுமில்லாமல், நாட்டின் மீது காதல் கொள்ளும் வகையிலான பாடலாக உருவாக்கப்பட்டதாக இயக்குநர் பரத் பாலா தெரிவித்துள்ளார்.
எப்படியான சூழலில் ஏஆர் ரஹ்மான் ‘வந்தே மாதரம்’ பாடலை உருவாக்கினார் என்பது குறித்தும பரத் பாலா பேசியுள்ளார்.
எனக்கு கண்ணீர் வந்தது..
சமீபத்திய யூடியூப் சேனல் நேர்காணலில் பேசியிருக்கும் இயக்குநர் பரத் பாலா, ஏ.ஆர். ரஹ்மான், நள்ளிரவு 2 மணிக்கு வந்தே மாதரம் பாடலை பதிவு செய்தார், அது ஒரு ஆன்மீக தருணமாக இருந்தது. அவர் வந்தே மாதரம் பாடலுக்காக, தனியாக ஒரு ஸ்டூடியோவையே அமைத்திருந்தார்.
ஆல் இந்தியா ரேடியோவில் ஒளிபரப்பான ஒரு பழைய பாடலின் சிறிய வெர்சனை கேட்டு, அதன் பதிப்பால் ஈர்க்கப்பட்டு வந்தே மாதரம் பாடலை உருவாக்கி முயற்சித்தார். ஆனால் 6 மாத காலமாக முயற்சித்தும், வந்தே மாதரம் பாடலை உருவாக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அ
ஒருநாள் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென எழுந்து ஏ.ஆர்.ரஹ்மான், பாடலை பதிவு செய்யதார். அஜ்மீர் தர்காவிலிருந்து வந்த ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டு, ரகுமான் பாடலின் இந்தி பதிப்பை பாடினார். அவர் எல்லாவற்றையும் தெய்வீகமாக மாற்றினார். அதைக் கேட்டபோது என் கண்களிலிருந்து கண்ணீர் வழிய தொடங்கியது” என்று இயக்குநர் பரத் பாலா நினைவுகூர்ந்துள்ளார்.