இயக்குநர் பாலாஜி சக்திவேலின் ‘நான் நீ நாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சில படங்களே இயக்கியிருந்தாலும்... வருடந்தோறும் படங்கள் இயக்காமல் நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டாலும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டேதான் இருக்கும்.
’காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ படங்களின் மூலம் ரசிகர்களின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் தற்போது, ‘நாம் நீ நான்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். புத்தர் பின்னணியில் இப்படத்தின் ஹீரோ வீரா நின்றிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது. நடிகை சாந்தினி ஹீரோயினாக நடிக்கிறார்.