\
மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணையும் சூர்யா?

மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணையும் சூர்யா?

மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணையும் சூர்யா?
Published on

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் சூர்யா அடுத்ததாக இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’, ‘பிதாமகன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்த சூர்யா, தற்போது மூன்றாவது முறையாக இணையவிருக்கிறார். பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாவும் சூர்யாவும் நல்ல நண்பர்கள். பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகாதான் நாயகியாக நடித்தார். இந்த நிலையில், துருவ் விக்ரமின் ‘வர்மா’ படத்திற்குப்பிறகு ஆர்.கே சுரேஷ் நடிக்கும் மலையாள படமான’ஜோசப்’படத்தின் தமிழ் ரீமேக் ‘விசித்திரன்’ படத்தை தயாரித்து வருகிறார் இயக்குநர் பாலா. சூர்யா - பாலா இணையும் படத்தை சூர்யாவே தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com