'அரபிக் குத்து' பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து நடனமாடி 'தெறி'க்கவிடும் அட்லீ!

'அரபிக் குத்து' பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து நடனமாடி 'தெறி'க்கவிடும் அட்லீ!

'அரபிக் குத்து' பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து நடனமாடி 'தெறி'க்கவிடும் அட்லீ!
Published on

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அரபிக் குத்து’ பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது. 

View this post on Instagram

A post shared by Atlee (@atlee47)

 யூட்யூப் தளத்தில் மட்டுமே 6.6 கோடி வியூஸ்களை இந்த பாடல் பெற்றுள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இந்த பாடலுக்கு நடனமாடி, அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து நடிகை சமந்தாவும் அதையே செய்திருந்தார். 

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு ‘தெறி, மெர்சல், பிகில்’ மாதிரியான வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனரான அட்லீ இந்த ‘அரபிக் குத்து’ பாடலுக்கு தனது மனைவியுடன் இணைந்து நடனமாடி அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வீடியோ வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 98,232 பேர் அதற்கு லைக்குகளை குவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com