\
தீபாவளி பரிசாக 'தர்பாரி'ன் புதிய போஸ்டர்

தீபாவளி பரிசாக 'தர்பாரி'ன் புதிய போஸ்டர்

தீபாவளி பரிசாக 'தர்பாரி'ன் புதிய போஸ்டர்
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனம் ‘தர்பார்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தத் திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தர்பார்’ குறித்த புதிய அப்டேட்டை சமீபத்தில் கொடுத்திருந்தார். அதில், கமல் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘தர்பார்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com