\
பிப்ரவரியில் ஓடிடியில் வெளியாகிறது செல்வராகவனின் ‘சாணிக்காயிதம்’

பிப்ரவரியில் ஓடிடியில் வெளியாகிறது செல்வராகவனின் ‘சாணிக்காயிதம்’

பிப்ரவரியில் ஓடிடியில் வெளியாகிறது செல்வராகவனின் ‘சாணிக்காயிதம்’
Published on

செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகும் ’சாணிக்காயிதம்’ வரும் பிப்ரவரி மாதம் ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருண் மாதேஸ்வரனின் ’சாணிக்காயிதம்’ படத்தில் இயக்குநர் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ’சாணிக்காயிதம்’ படத்தை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்துள்ள ‘ராக்கி’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ‘சாணிக்காயிதம்’ படம் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருக்கிறது.

கடந்த் ஆகஸ்ட் மாதமே டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார் செல்வராகவன். இந்த நிலையில், படத்தை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட், அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி வெளியாகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com