திடீர் உடல்நலக் குறைவு -மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ‘அவன் இவன்’ பட நடிகர் ஜி.எம். குமார்

திடீர் உடல்நலக் குறைவு -மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ‘அவன் இவன்’ பட நடிகர் ஜி.எம். குமார்
திடீர் உடல்நலக் குறைவு -மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ‘அவன் இவன்’ பட நடிகர் ஜி.எம். குமார்

இயக்குநரும், நடிகருமான ஜி.எம்.குமார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராகவும், பின்னர் பிரபுவின் ‘அறுவடை நாள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘பிக்பாக்கெட்’, ‘இரும்பு பூக்கள்’, ‘உருவம்’ ஆகியப் படங்களை ஜி.எம்.குமார் இயக்கியுள்ளார். இதேபோல், ‘கன்னி ராசி’, ‘காக்கி சட்டை’, ‘மை டியர் மார்த்தாண்டன்’ ஆகியப் படங்களுக்கு எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ள ஜி.எம். குமார், ‘கேப்டன் மகள்’ படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாகினார்.

தொடர்ந்து ‘காதல் வைரஸ்’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘வெயில்’ படத்தில் கடுமையான தந்தையாக நடித்து மிரட்டியிருப்பார். இந்தப் படத்தின் வாயிலாக நல்ல அறிமுகம் கிடைத்த ஜி.எம். குமார், ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘மலைக்கோட்டை’, ‘குருவி’, ‘அவன் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனி முத்திரை பதித்தார்.

இந்நிலையில், தற்போது திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஜி.எம். குமார், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவரீதியான காரணங்கள் எதுவும் வெளியாகாதநிலையில், விரைவில் அவர் குணமடைய ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com