சங்கமிக்காத ஆர்யா.. வடசென்னையில் குடியேறும் அமீர்!

சங்கமிக்காத ஆர்யா.. வடசென்னையில் குடியேறும் அமீர்!

சங்கமிக்காத ஆர்யா.. வடசென்னையில் குடியேறும் அமீர்!
Published on

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சூட்டோடு ஆர்யாவை வைத்து சந்தனத்தேவன் படத்தை ஆரம்பித்தார் இயக்குநர் அமீர்.சில நாட்கள் சூட்டிங் கிளம்பிய பிறகு பலமாதங்களாக அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டது.இடையில் ’மஞ்சள் பை’இயக்குநர் ராகவனின் கடம்பன் படத்தில் நடித்து வந்தார் ஆர்யா. அந்தப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுதிரியுடன் இணைந்து தயாரித்தார் ஆர்யா. அதில் ஆர்யாவுக்கு பலத்த நஷ்டம். அடுத்து சங்கமித்ராவில் கமிட்டானார் ஆர்யா. இந்நிலையில் சந்தனதேவன் படத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் ஆர்யா. 
 
இந்நிலையில் இயக்குனர் அமீரும், வெவ்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வட சென்னை’ படத்தில் அமீருக்கு ஒரு ஸ்பெஷல் ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த கேரக்டரில் நடிப்பதாக இருந்த விஜய் சேதுபதி, வடசென்னை தாமதத்தின் காரணமாக விலகினார். அந்த இடத்தில்தான் அமீர் பொருத்தப்பட்டுள்ளார். இதனால், சந்தனத்தேவன் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com