சினிமா
மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு தமிழக அரசு அஞ்ச வேண்டியதில்லை: இயக்குனர் அமீர் கருத்து
மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு தமிழக அரசு அஞ்ச வேண்டியதில்லை: இயக்குனர் அமீர் கருத்து
மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு தமிழக அரசு அஞ்ச வேண்டியதில்லை என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்ட ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து மத்திய அரசு அரசியல் செய்ய முயன்றால், அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து அவர் இயக்க உள்ள சந்தனத்தேவன் படத்தில் இடம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு பாடலை வெளியிடும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கரு.பழனியப்பன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகர்கள் ஆர்யா மற்றும் சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.