\
அந்நியனுக்குப் பிறகு விக்ரமை சரியாக பயன்படுத்தியுள்ளீர்கள் கார்த்திக்: அல்போன்ஸ் புத்திரன்

அந்நியனுக்குப் பிறகு விக்ரமை சரியாக பயன்படுத்தியுள்ளீர்கள் கார்த்திக்: அல்போன்ஸ் புத்திரன்

அந்நியனுக்குப் பிறகு விக்ரமை சரியாக பயன்படுத்தியுள்ளீர்கள் கார்த்திக்: அல்போன்ஸ் புத்திரன்
Published on

விக்ரமின் ‘மகான்’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள ‘மகான்’ கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “’மகான் புத்திசாலியான படம். அந்நியனுக்குப் பிறகு விக்ரமை சரியாக பயன்படுத்தியதற்கு நன்றி கார்த்திக் சுப்பராஜ். ‘ஜிகர்தண்டா’வை தாண்டி வந்துவிட்டீர்கள் பாபி சிம்ஹா” என படத்தில் நடித்த துருவ் விக்ரம், சனந்த் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com