பாஜக வேட்பாளர் தோல்வி: மொட்டை அடித்த சினிமா இயக்குனர்!

பாஜக வேட்பாளர் தோல்வி: மொட்டை அடித்த சினிமா இயக்குனர்!

பாஜக வேட்பாளர் தோல்வி: மொட்டை அடித்த சினிமா இயக்குனர்!
Published on

பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததால், பிரபல மலையாள இயக்குனர் தனது தலையை மொட்டை அடித்துக்கொண்டார்.  

மலையாள திரைப்பட இயக்குனர், அலி அக்பர். இவர், ஜூனியர் மந்த்ராகே, குடும்ப வார்த்தைகள், பாய் பிரதர்ஸ், பாம்பு பாய்ஸ், கிராம பஞ்சாயத்து உட்பட சுமார் 20 திரைப்படங்களை இயக்கியுள்ளார். பல படங்களுக்கு திரைக்கதை வசனமும் பாடல்களும் எழுதியுள்ளார். 

(கும்மனம் ராஜசேகரன்)

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர், தேர்தலுக்கு முன் ஒரு சபதம் போட்டியிருந்தார். திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றும் அப்படி அவர் வெற்றி பெறவில்லை என்றால் தனது தலையை மொட்டை அடிப்பேன் என்றும் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியிருந்தார்.  ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கும்மனம் ராஜசேகரன், காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரிடம் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து, சொன்னபடி, தனது தலையை மொட்டை அடித்துக்கொண்ட அலி அக்பர், ‘’கும்மனம் ராஜசேகரன் தோற்கடிக்கப்படுவார் என்று நினைக்கவில்லை. அவர் வெற்றி பெறுவார் என்றே நினைத்திருந்தேன். அதனால் கொடுத்த வாக்குபடி மொட்டையடித்து விட்டேன்’’ என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மொட்டை அடித்த புகைப்படத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com