வாரிசு ரிலீசுக்கு முன் ரிலீசுக்கு பின்.. விஜய்யை சீண்டினாரா தில் ராஜு? ட்ரெண்டாகும் வீடியோ

வாரிசு ரிலீசுக்கு முன் ரிலீசுக்கு பின்.. விஜய்யை சீண்டினாரா தில் ராஜு? ட்ரெண்டாகும் வீடியோ
வாரிசு ரிலீசுக்கு முன் ரிலீசுக்கு பின்.. விஜய்யை சீண்டினாரா தில் ராஜு? ட்ரெண்டாகும் வீடியோ

வாரிசு படத்தின் இசை வெளியீட்டின் போது தயாரிப்பாளர் தில் ராஜூ விஜய் குறித்தும், வாரிசு படம் குறித்தும், “டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, ஃபேமிலி சென்டிமென்ட் வேணுமா அதுவும் இருக்கு” என பேசியது படத்துக்கு வந்த வரவேற்பை விட அதிகளவில் சமூக வலைதளங்களில் வைரலானது.

தில் ராஜூ பேசியதை பின்னணி இசையெல்லாம் கோர்த்து அதனை ரீமிக்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாகவும் கொடிக்கட்டி பறந்தது. மேலும் தில் ராஜு பாணியை மீம் டெம்ப்ளேட்டாகவே உருவாக்கி தினந்தோறும் விதவிதமான மீம்களையும் நெட்டிசன்கள் பறக்கவிட்டு வருகிறார்கள்.
ஒருகட்டத்தில் தயாரிப்பாளரை ட்ரோல் மெட்டீரியலாகவே இணையவாசிகள் மாற்றிவிட்டார்கள்.

இருப்பினும் இதனை மிகவும் எளிதாகவே தில் ராஜூ எடுத்துக் கொண்டதால் அவருடைய பெருந்தன்மையையும் சினிமா வட்டாரத்தினர் பாராட்டியும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில், புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள பாலகம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று கடந்த பிப்ரவரி 28ம் தேதி தெலங்கனாவில் நடந்தது. இந்த படத்தையும் தில் ராஜூவே தயாரித்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது வாரிசு பட விழாவின் போது தான் பேசியதையே ஸ்பூஃப் செய்யும் வகையில் தில் ராஜூ பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதில், “தமிழ்நாட்டுல என்னோட பேச்சு ரொம்ப பிரபலமாகிருக்கு. இந்த படத்துல ஃபைட்ஸ் இல்ல, இந்த படத்துல டான்ஸ் இல்ல, இந்த படத்துல விஜய் சாரோட பாடி லேங்வெஜ் இல்ல, ஆனா, இந்த படத்துல சூப்பர் என்டெர்டெயின்மென்ட் இருக்கு, சூப்பர் எமோஷன்ஸ் இருக்கு, சூப்பர் தெலங்கனா நேட்டிவிட்டி இருக்கு, இது நம்ம மனசுக்கு பிடிச்சமான சினிமா. இத மட்டும் சொல்லிக்கிறேன். நன்றி.” என தில் ராஜூ பேசியிருந்தார். இதனைக் கண்ட இணையவாசிகள், “தன்னை ட்ரோல் செய்தவர்களையும் மதிக்கும் வகையில் செல்ஃப் ட்ரோல் செய்திருக்கிறார். அருமை” நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com