\
இந்தி நடிகர் திலீப் குமார் சீரியஸ்

இந்தி நடிகர் திலீப் குமார் சீரியஸ்

இந்தி நடிகர் திலீப் குமார் சீரியஸ்
Published on

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாருக்கு தற்போது 94 வயது. முதுமை காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதை அடுத்து வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்தார். இந் நிலையில், கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவருக்கு கிட்னி தொடர்பான பிரச்னை இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்தப் பிரச்னை இன்று அதிகரித்திருப்பதால் அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல்நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com