நடிகையை கடத்த நான் காரணம் என்றார்கள்: ஹீரோ திடுக்
நடிகை (பாவனா) கடத்தில் சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி பேசியது அதிர்ச்சி அளித்தது என்று நடிகர் திலீப் கூறினார்.
நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துகொண்டபின், தன்னோடு கிசு கிசுக்கப்பட்ட நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார் நடிகர் திலீப்.
மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், என்னைச் சுற்றி தேவையில்லாத பிரச்னைகள், வதந்திகள் கடந்த சில வருடங்களாக வந்துகொண்டிருக்கிறன. சமீபத்தில் நடிகை ஒருவர் (பாவனா) கடத்தப்பட்டச் சம்பவத்தில் கூட என்னைத் தொடர்புப் படுத்தி பேசினார்கள். நான் அந்த நடிகை மீது மரியாதை வைத்திருக்கிறேன். அவர் அதிலிருந்து மீண்டு படப்பிடிப்புகளில் கலந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் என்னைப் பற்றி வந்த புகார் பற்றி அவர் ஒன்றும் சொல்லாமல் இருந்தது எனக்கு கவலையளித்தது.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதுபவர் அவர். அதிலாவது எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கலாமே? இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். என் வாழ்க்கையை முடித்துவிடவும் நினைத்தேன். என் மகள் மீனாட்சிக்காக அந்த முடிவை கைவிட்டேன். தேவையில்லாத குற்றச்சாட்டுகளில் இருந்து என்னை விட்டுவிடுங்கள். என்னை தனியாக வாழவிடுங்கள். நான் உங்கள் பிரச்னையில் தலையிட மாட்டேன். நான் பேச ஆரம்பித்தால் இன்டஸ்ட்ரியில் பல பேருக்கு பெரும் பிரச்னை ஏற்படும்’ என்று திலீப் கூறியுள்ளார்.

