நடிகர் திலீப்புக்கு உடல் நலக்குறைவு: தூக்கமின்றி அவதி

நடிகர் திலீப்புக்கு உடல் நலக்குறைவு: தூக்கமின்றி அவதி

நடிகர் திலீப்புக்கு உடல் நலக்குறைவு: தூக்கமின்றி அவதி
Published on

நடிகை பாலியல் வன்முறைக்குள்ளான வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் திலீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் திலீப் ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஒரு மாத காலமாக சிறையில் உள்ள அவருக்கு சிறப்பு வசதி எதுவும் அளிக்கப்படவில்லை. மன அழுத்தம், திலீப்பை கடுமையாக பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக சரியாக தூக்கம் இல்லாமல் அவர் அவதிப்படுகிறார். தனது மனைவி காவ்யாவிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்த இருப்பதால் அவரும் கைது செய்யப்படுவாரோ என்ற கவலையில் திலீப் உள்ளதாகவும் இதனால் அவர் உடல் இளைத்துள்ளதாகவும் சிறைத் துறையினர் கூறியுள்ளனர். 

இதற்கிடையில், திலீப்பின் கோர்ட் காவல் இன்றுடன் முடிந்துவிட்டது. நாளை அவரது காவல் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com