\
திலீப் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

திலீப் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

திலீப் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
Published on

கேரளாவில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்தில் நடிகர் திலீப் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனுவை அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுனில் தோமஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திலீப் சார்பில் ஆஜரான வக்கீல், திலீப்பின் திரையுலக பயணத்தை சீர்குலைக்கவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது எனக்கூறி அவருக்கு ஜாமின் வழங்க கேட்டுக்கொண்டார். இதற்கு அரசு தரப்பு வக்கீல், நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் இன்னும் கிடைக்காததாலும், திலீப்பிடம் மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அவரை ஜாமீனில் விடக்கூடாது என கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய கேரள உயர் நீதிமன்றம் திலீப்புக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com