‘வலிமை‘ படத்தில் அஜித்தின் அப்பாவாக மறைந்த மூத்த நடிகர் - வெளியான தகவல்

‘வலிமை‘ படத்தில் அஜித்தின் அப்பாவாக மறைந்த மூத்த நடிகர் - வெளியான தகவல்

‘வலிமை‘ படத்தில் அஜித்தின் அப்பாவாக மறைந்த மூத்த நடிகர் - வெளியான தகவல்
Published on

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தில், அவரது தந்தையாக, மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் படம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், நாளை திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி தினம் தினம் புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் ‘வலிமை’ படத்தில் மறைந்த நடிகர் ஜெய் சங்கரின் படம் பயன்படுத்தப்பட்டிப்பது தெரியவந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அஜித்தின் அப்பாவாக அவர் காட்டப்படுவார் என்று கூறப்படுகிறது. ‘வலிமை’ திரைப்படம் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளுடன், தாய் - மகன் தொடர்பான உணர்வுப்பூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே, இந்தப் படத்தில் அம்மா பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் எழுத, சித்ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்நிலையில், மறைந்த நடிகர் ஜெய்சங்கர் புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக வெளியான தகவலால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ‘வலிமை’ திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com