Did Vijay’s Son Change His Initial?
விஜய், ஜேசன் சஞ்சய்எக்ஸ் தளம்

இன்ஷியலை மாற்றிய விஜயின் மகன்? வைரலாகும் தகவல்.. உண்மை என்ன? | #Jason Sanjay | #Vijay

ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்டு மற்றும் கையெழுத்துகளில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
Published on

தந்தையின் பெயருக்கு பதிலாக அவர் Jason Sanjay S என்ற முறையில் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வரும் 'S' என்பது அவரது தாய் சங்கீதாவின் பெயரைக் குறிப்பதாக இணையவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, வரயிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட உள்ளார். இதற்காக, அவர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாக சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கணவர் விஜயின் நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதிக்கவும் சங்கீதா இன்னொரு மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஹா என்ற மகளும் உள்ளனர். இதனிடையே, விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இவரின் முதல் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கான பணிகள் வேகம்பிடித்து உள்ளன. இது தவிர, தனது அடுத்த படத்துக்கான பணிகளையும் தொடங்கியுள்ளார்.

Did Vijay’s Son Change His Initial?
ஜேசன் சஞ்சய்எக்ஸ் தளம்

இந்தச் சூழலில், ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்டு மற்றும் கையெழுத்துகளில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தந்தையின் பெயருக்கு பதிலாக அவர் Jason Sanjay S என்ற முறையில் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வரும் 'S' என்பது அவரது தாய் சங்கீதாவின் பெயரைக் குறிப்பதாக இணையவாசிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால், உண்மையில் ஜேசன் சஞ்சய் தன் தாயாரின் இன்சியலையும் பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ‘சிக்மா’ படத்தின் டீசரில்கூட இன்ஷியல் இல்லாமல் வெறும் ஜேசன் சஞ்சய் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இன்ஸ்டாவில் தனது தந்தை விஜயைப் பின்தொடர்வதை ஜேசன் நிறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Did Vijay’s Son Change His Initial?
ஒரே கலர் DRESS.. திருமண விழாவுக்கு இணைந்துவந்த விஜய் - த்ரிஷா.. #ViralVideo

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com