\
துருவ் விக்ரமின் சூப்பர்ஃபிட் தோற்றம் : ரசிகர்கள் உற்சாகம்

துருவ் விக்ரமின் சூப்பர்ஃபிட் தோற்றம் : ரசிகர்கள் உற்சாகம்

துருவ் விக்ரமின் சூப்பர்ஃபிட் தோற்றம் : ரசிகர்கள் உற்சாகம்
Published on

சில தினங்களுக்கு முன்பு சீயான் விக்ரமின் புதிய தோற்றத்துடன் கூடிய படங்களை துருவ் விக்ரம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகமளித்தார். அதில் விக்ரம் இருளான பின்னணியில் அவர் ஒரு போர்வீரனைப் போல நிற்கிறார். அடர்த்தியான தாடி, நீண்ட முடி என முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் கையில் டாட்டூ. இந்தப் படம் அனைத்தும் கோப்ரா படத்திற்காக எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தற்போது தனது சூப்பர்ஃபிட் படங்களை வெளியிட்டுள்ளார் துருவ் விக்ரம். ரசிகர்களிடையே அவை கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியுள்ளன. படத்தில் முகம் தெளிவாகத் தெரியாத நிலையில், மஞ்சள் பனியனுடன் அவரது சிக்ஸ்பேக் மட்டும் தெரியுமளவுக்கு லைட்டிங் உள்ளது. இதெல்லாம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போகும் சீயான் விக்ரமின் 60 வது படத்திற்கான முன்தயாரிப்புகள் என்கிறார்கள். அதில் மகனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் விக்ரம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com