‘துரந்தர்’ உளவாளி ரன்வீர் சிங்... பாகிஸ்தானுடன் பூர்வீகத் தொடர்பு? நிஜமான பின்னணி என்ன?
துரந்தர்' மற்றும் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' ஆகிய இரண்டு படங்களிலும் ரன்வீர் சிங் பாகிஸ்தானின் பயங்கரவாதக் குழுக்களில் ஊடுருவும் இந்திய உளவாளியான ஹம்சா அலி மசாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதன்மூலம் அவரது உண்மையான பிறப்பிடம் குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19 வெளியானது. முதல் பாகம் போலவே இந்த பாகத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் உலகளவில் முதல் நாள் வசூல் 240 கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது. இந்திய அளவில் முதல் நாள் வசூலில் சாதித்த படங்களை எல்லாம் முறியடித்து முதல் இடமும் பிடித்தது இந்தப் படம். இந்த நிலையில், துரந்தர்' மற்றும் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' ஆகிய இரண்டு படங்களிலும் ரன்வீர் சிங் பாகிஸ்தானின் பயங்கரவாதக் குழுக்களில் ஊடுருவும் இந்திய உளவாளியான ஹம்சா அலி மசாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதன்மூலம் அவரது உண்மையான பிறப்பிடம் குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. உண்மையில் அவர் பிறந்தது பாகிஸ்தானா? இப்படி பேசுபொருளாவதற்கு என்ன காரணம்? வாருங்கள்... அதுகுறித்த செய்திகளை இங்கு அறியலாம்.
பிபிசி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ரன்வீர் சிங்கின் பாட்டியான சந்த் பர்க் , 1940-களில் பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். தற்போதும், அந்த இடம் இன்றைய பாகிஸ்தானில் உள்ளது. பிரிக்கப்படாத பாகிஸ்தானில், அதாவது இந்தியாவின் பஞ்சாபில், சாமுவேல் மார்ட்டின் பர்க் மற்றும் அவரது சகோதரி சந்த் பர்க் அடங்கிய கிறிஸ்டியன் பர்க் குடும்பம் வசித்து வந்துள்ளது. அப்போது, சாமுவேல் 11 நாடுகளுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்துள்ளார். அவரது சகோதரியான சந்த் பர்க்கோ, இந்தி சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்துள்ளார். இந்த சந்த் பர்க்தான், தற்போதைய 'துரந்தர்' புகழ் ரன்வீர் சிங்கின் பாட்டி ஆவார். பின்னர், நாடு பிரிவினைக்குப் பிறகு சந்த் பர்க், மும்பையில் தஞ்சமடைந்தார்.
அங்கிருந்தபடி, மேலும் திரைத்துறையில் இந்தியுடன் பஞ்சாபி மொழிப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். இதன்மூலம் அவர், ’பஞ்சாபின் நடன லில்லி' என்று அழைக்கப்பட்டார். அதேநேரத்தில், பாகிஸ்தானின் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலும் அவர் நடிக்கத் தவறியதில்லை. கொஞ்சங்காலம் திரையில் இருந்து விலகியிருந்தாலும், அவர் மீண்டும் ராஜ் கபூர் மூலம் 1954இல் வெளிச்சத்திற்கு வந்தார். திரையின் வெளிச்சத்தில் மின்னிய அவர், சுந்தர் சிங் பவ்னானி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு டோன்யா மற்றும் ஜக்ஜித் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் ஜக்ஜித் வேறு யாருமல்ல, ரன்வீர் சிங்கின் தந்தை ஆவார். இதனால், ரன்வீர் சிங் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அல்ல என்பதையும், அவர் முழுக்க முழுக்க இந்தியாவின் பஞ்சாபையே சேர்ந்தவர் என்பதையும் பிபிசியின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. மொத்தத்தில் ’துரந்தர்’ இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகி இருக்கிறார்.

