அல் மோஸ்ட் ஒரே ‘டேக்’: நடிப்பில் அசத்தும் விக்ரம் மகன்

அல் மோஸ்ட் ஒரே ‘டேக்’: நடிப்பில் அசத்தும் விக்ரம் மகன்

அல் மோஸ்ட் ஒரே ‘டேக்’: நடிப்பில் அசத்தும் விக்ரம் மகன்
Published on

நடிகர் துருவ் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளை ஒரே டேக்கில் நடித்து கொடுத்துள்ளார்.

தெலுங்கில் பெரிய ஹிட் அடித்த ‘அர்ஜூன்ரெட்டி’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை இயக்குநர் பாலா வாங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கான வசனத்தை ராஜூ முருகன் எழுதியுள்ளார். இதற்கு ‘வர்மா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நேபாள் காட்மாண்டுவில் நடைபெற்றது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் விக்ரமின் மகன் நடித்து வருகிறார். தனது மகனின் நடிப்பை அருகில் இருந்து காண்பதற்காக அவரும் நேபாள் சென்றுள்ளார். ஏற்கெனவே நடிப்பில் அதிக ஆர்வம் உள்ள துருவ் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட எல்லா காட்சிகளையும் அதிகபட்சமாக ஒரே டேக்கில் நடித்து முடித்திருக்கிறார். இதை கண்ட படக்குழு அசந்து போய்விட்டதாம். அந்தளவுக்கு முன் தயாரிப்புடன் இருந்துள்ளார் துருவ். அவரது தந்தை விக்ரம் கூடவே இருந்து மகனை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் துருவ் தாடியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றது. முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட படக்குழு விரைவில் தன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com