தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் தற்கொலை !

தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் தற்கொலை !

தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் தற்கொலை !
Published on

தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கதாபாத்திரமாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இது தவரி அமீர் கானின் "பி.கே" படத்திலும் அனுஷ்கா சர்மாவுக்கு ஜோடியாக நடித்தார். மேலும் பல்வேறு முக்கிய இயக்குநர்களின் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் தன்னுடைய இல்லத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவரின் இந்தத் திடீர் முடிவு பலரையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com