‘தளபதி படத்தை முன்னிட்டு பெயர் சூட்டும் விழா’- விஜய் ரசிகர் செய்த செயல்

‘தளபதி படத்தை முன்னிட்டு பெயர் சூட்டும் விழா’- விஜய் ரசிகர் செய்த செயல்
‘தளபதி படத்தை முன்னிட்டு பெயர் சூட்டும் விழா’- விஜய் ரசிகர் செய்த செயல்

அரூரில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில், விஜய் ரசிகர் தனது குழந்தைக்கு பெயர் சூட்டும்விழா நடத்தினார்.

தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று முதல் திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள திரையரங்கில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று காலை திரையிடப்பட்டது. இதையடுத்து மிகுந்த ஆரவாரத்துடன் திரையரங்குகளில் கூடிய விஜய் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தொண்டர் அணி பொறுப்பாளராக உள்ள நவீன் - ஜானகி தம்பதியினரின் இரண்டு வயதான ஆண் குழந்தைக்கு பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. இந்த திரைப்படத்தை கொண்டாடும் வகையில் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்துள்ள கதாபாத்திரத்தின் வீரராகவன் என்ற பெயரை, இந்த ஆண் குழந்தைக்கு ரசிகர்கள் சூட்டி மகிழ்ந்தனர்.

இந்த பெயர் சூட்டும் விழாவில் பீஸ்ட் என, பெயர் எழுதி வைத்து கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடினர். திரைப்படம் வெளியானதை வெகு விமர்சையாக ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், திரையரங்கிலே விஜய் ரசிகர் தனது குழைந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்தி மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com