நாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...! 

நாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...! 

நாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...! 
Published on

'தர்பார்' திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 167-வது படமாக ‘தர்பார்’ உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

அனிருத்  இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘சும்மா கிழி நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு’ என்ற அரசியல் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து ட்ரைலருக்காக அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்துக்கொண்டிருக்கினர். 

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், தர்பார் படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com