தர்பார் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை

தர்பார் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை
தர்பார் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை

1370 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாகவும், சுனில் ஷெட்டி எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர, யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 7ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 4 ஆயிரம் திரை அரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகாலையிலேயே சிறப்புக் காட்சிகளை திரையிட மாநில அரசு அனுமதி வழங்கியதால், திரை அரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தது. இந்த வழக்கில் தர்பார் திரைப்படத்தை 1370 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ரிலையன்ஸ், ஜியோ ஆகிய நிறுவனங்களுக்கு நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com