'நான் வேகமாக முடித்தப் படம் இதுதான்' - இயக்குநரை புகழ்ந்த நடிகர் தனுஷ்!

'நான் வேகமாக முடித்தப் படம் இதுதான்' - இயக்குநரை புகழ்ந்த நடிகர் தனுஷ்!

'நான் வேகமாக முடித்தப் படம் இதுதான்' - இயக்குநரை புகழ்ந்த நடிகர் தனுஷ்!
Published on

வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்கள் கடைசியாக தனுஷுக்கு வெளியாகின. அடுத்து ‘பட்டாஸ்’ என்ற திரைப்படம் தனுஷுக்கு வெளியாகவுள்ளது. இதற்கிடையே ‘பேட்ட’ திரைப்படத்துக்கு பின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனுஷை வைத்து திரைப்படம் இயக்கினார்.

வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், நான் நடித்த திரைப்படங்களிலேயே வேகமாக நிறைவடைந்த திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் போன்ற விவேகமான மற்றும் தொலைநோக்கு பார்வைகொண்ட இயக்குநருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இது சிறப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி. உங்களைப்போல சிறந்த நடிகருடன் பணியாற்றியது எனக்கும் என் அணிக்கும் சிறந்த அனுபவம் என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com