மேயாத மான் இயக்குநர் ரெத்ன குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அறிமுக இயக்குநர் ரெத்ன குமார் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் மேயாத மான். வைபவ், ப்ரியா பவானி ஷங்கர், இந்துஜா நடித்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷூம் தனது ட்விட்டர் பக்கத்தில் மேயாத மானை பாராட்டியிருந்தார். இந்நிலையில் ரெத்ன குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேயாத மானின் இயக்கம் தனுஷூக்கு பிடித்துவிட்டதாகவும், அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க தனுஷ் ஆசைப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மாரி 2, கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் நடிக்க உள்ள தனுஷ், அதன்பின் தேனாண்டாள் தயாரிப்பில் நடிக்க உள்ளார். அடுத்து ரெத்ன குமார் இயக்கத்தில் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.